திருவெள்ளறை பாண்டியர் காலக் கல்வெட்டு
அமைவிடம் :திருச்சி
மாவட்டம், லால்குடி வட்டம், திருவெள்ளரை கல்வெட்டுப் பாடம் குறிப்பு: இக்கல்வெட்டின் முழுப் பாடம் வெளியிடப்பெறவில்லை வெளியற் தளவத்தொடைமாறன் விளக்கம்: “வெளியற் தளவத் தொடை மாறன்” என்று துவங்கும் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பைப் பற்றிக் கூறுகிறது. சோழ நாட்டின் அனைத்துக் கட்டிடங்களையும் இடித்து அழிவுக்குள்ளாக்கியுள்ளார் சுந்தரபாண்டியன். ஆனால், சங்க காலத்தில் பட்டினப்பாலை பாடியதற்காக உருத்திர கண்ணனார்க்குக் கரிகாற் சோழன் பரிசளித்த 16 கால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவிட்டார் என்று கல்வெட்டு கூறுகிறது. சிறப்பு: சங்க காலத்தில் கட்டப்பெற்ற கட்டிடம் (பொ.ஆ.மு 300-பொ.ஆ.300) பல நூற்றாண்டுகள் கழித்தும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசர்கள் ஒரு மரபின் மீது பகைமைக் கொண்டாலும் தொன்மையை மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்கிறது. |